யாழில் அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டது! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

யாழ். கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சற்று முன்னர், அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டை நுழைவு பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers