விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி குழப்பமான கூட்டணி; சித்தார்த்தன் எம்.பி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிக குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலையிலான கூட்டணி மிக குழப்பமான கூட்டணி.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்னேஸ்வரன் ஐயா என்று சொல்கின்றார்.

அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப்போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் என ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்னேஸ்வரன் ஐயாவும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது. அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது.

அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதியான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்வியே? எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers