வீடு புகுந்து அதிபரின் கழுத்தை வெட்டிய மர்ம நபர்

Report Print Vethu Vethu in சமூகம்

பலங்கொடயில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர், ஓய்வு பெற்ற அதிபரின் கழுத்தை வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த அதிபர் சிகிச்சைக்காக பலங்கொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலத்கம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு வெட்டுக்காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்து கழுத்தை வெட்டிய அதிபர் தலையில் தலைகவசம் அணிந்திருந்து வந்த நிலையில் அதனை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.

எனினும் இன்னமும் சந்தேக நபரை கைது செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலங்கொட பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers