மன்னார் மறைமாவட்டம் காத்தான்குளம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட 'புனித சூசையப்பர் ஆலயத்தின்' அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் ஆயர் பேரருட் பி.ல.இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, கத்தோலிக்க அவையின் வழிபாட்டுத் திரு மரபிற்கு ஏற்ற முறைப்படி ஆலயத்தைத் திறந்த வைத்து, ஆலயத்தின் நுழைவாயிலையும், ஆலயத்தையும், பலிப் பீடத்தையும், நற்கருணைப் பேழையையும் அர்சித்துப் புனிதப்படுத்தினார்.
இப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி.செ.வசந்தக்குமார் அடிகளாரின் பணிக்காலத்தில் ஓய்வு நிலை ஆயர் பேரருட் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் காலத்தில் அனுமதியோடு அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி.யே.அமல்றாஜ் குரூஸ் அவர்களல் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.
புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புனித சூசையப்பர் ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் நிகழ்வில் பங்குத் தந்தையோடு இணைந்து துறவிகளும், ஆலயத்தின் அருட்பணிப்பேரவையும், பல்வேறு பணிக்குழுக்களும், ஆலய மக்களும் அருட்பணியாளர்களும், துறவிகளும், இறை மக்களும் கலந்து சிறப்பித்தனர்.