குருநாகல் நீதிமன்ற நீதிவான் சம்பத் ஹேவாவசம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுறக்கள் தொடர்பில் நீதிச்சேவைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியர் மொஹமட் ஷாஃபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் இருந்து தற்போது ஷாஃபி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே குருநாகல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் ஹேவாவசம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்களை திரட்டுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு பொலிஸ்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.