2020க்குள் அனைவருக்கும் வீடு

Report Print Steephen Steephen in சமூகம்
153Shares

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்க தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

வீடமைப்பு என்ற துறை ஒரு அமைச்சின் கீழ் இருக்க வேண்டும். அதனை பிரிப்பதால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள்.

வீடமைப்பு துறை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆறு இடங்களுக்கு செல்ல வேண்டும். நகர வீடமைப்புக்கு ஒரு பக்கம் செல்ல வேண்டும்.

வடக்கு, கிழக்கு வீடமைப்புக்கு வேறு திசைக்கு ஓட வேண்டும். அனர்த்தங்களில் வீடுகளை இழப்போர் மற்றுமொரு திசைக்கு ஓட வேண்டும். மீனவ வீடமைப்புக்கு இன்னுமொரு திசை.

மலையக தோட்டங்களில் வீடமைப்புக்கு மற்றுமொரு அமைச்சு. கிராமிய வீடமைப்பு எமது அமைச்சின் கீழ் உள்ளது. அரசியல் விளையாட்டுக்கள் காரணமாவே இது நடந்துள்ளது.

நபர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக வீடுகளை நிர்மாணிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சு துண்டுகளாக உடைந்து போயுள்ளது.

அமைச்சு துண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் 2020 -25 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வாழும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.