வவுனியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்
34Shares

வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இலங்கை தேசிய சமாதான பேரவையினால் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10.30மணியளவில் வவுனியா, பௌத்த வணக்கஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.

நல்லிணக்கம் தொடர்பான பிரதேச சர்வ மதக்குழுவிற்கும், சிவில் பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூகப்பிரதிநிதிகள், மத குருமார்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல் வரையும் இடம்பெறுகின்றது.

மக்களுக்கிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.