கிழக்கிலங்கையில் மிகப் பழமை வாய்ந்த புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா

Report Print Kumar in சமூகம்
36Shares

கிழக்கு மாகாணத்தில் உள்ள மிக பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு - வீச்சுக்கல்முனை, புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் 175ஆம் ஆண்டு நிறைவினையோட்டியும் திருவிழா கொடியிறக்கத்தினை முன்னிட்டும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் இன்று காலை விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் ஏற்படவேண்டும் என்ற விசேட பிரார்த்தனையும் செய்யப்பட்டுள்ளது.

குருத்துவ வாழ்வில் இன்றுடன் 31ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளார் ஆயர், ஆலய திருவிழாவுக்கு பங்களிப்பு செய்தவர்கள் மற்றும் குருமார்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து ஆலய முன்றலில் ஆலயத்தின் பங்குத்தந்தையின் விசேட பூஜைகளுடன் கொடியிறக்கமும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு விமானப்படை பணியகத்தின் கட்டளை அதிகாரி மெண்டிஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆலயத்தின் இன்றைய கொடியிறக்க திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.