சாரதிகளின் அவதானமின்மையால் 12 எருமை மாடுகள் பலி

Report Print Thileepan Thileepan in சமூகம்
117Shares

முல்லைத்தீவு - மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 12 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.

ஒட்டிசுட்டான் வீதியில் கல்குவாரிக்கு அண்மித்த பகுதியின் வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.

இதனால், 12 எருமை மாடுகள் இறந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்திற்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

சாரதிகளின் அவதானமின்மையும் கால்நடை வளர்ப்பாளர்களின் அசமந்தபோக்குமே இவ்விபத்திற்கு காரணமாகும் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.