தேர்தல் காலத்தில் சூறாவளி எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்
137Shares

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் காலப்பகுதியில் நாட்டில் காலநிலை சீர்கேடு மிக மோசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வரையில் இலங்கையில் தீவிரமான ஒரு காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை காலநிலை அவதான நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அதிகமான மழைப்பெய்யக் கூடும் எனவும் சூறாவளிக்கான சாத்தியப்பாடுகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தேர்தல் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.