ராஜூவ் காந்தியை கொலை செய்வதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தினேன்! பகிரங்கமாக தெரிவித்த முன்னாள் கடற்படை சிப்பாய்

Report Print Jeslin Jeslin in சமூகம்
796Shares

முன்னாள் இந்திய பிரதமர் ராஜூவ் காந்தி இலங்கை வந்திருந்த போது அவரை கொலை செய்யும் நோக்குடனேயே நான் அவரை தாக்கினேன். நிழலைக் கண்டு அவர் தலையை குணிந்ததால் தப்பித்தார். தோற்பட்டையிலேயே அடிப்பட்டது என 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை சிப்பாயாக இருந்த ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்தோ லங்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்காக முன்னாள் இந்திய பிரதமர் ராஜூவ் காந்தி இலங்கை வந்திருந்தார்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பின்னர் இடம்பெற்ற கடற்படை மரியாதை அணிவகுப்பின்போது அப்போது கடற்படை சிப்பாயாக இருந்த ரோஹன விஜேமுனி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இந்தியப் பிரதமரை தாக்கியிருந்தார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 32 வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கும்போதே ரோஹன விஜேமுனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அந்த தாக்குதலின் போது எதையும் சிந்திக்காமல் நான் வெறுமனே அதனை செய்யவில்லை. நான் மேற்கொண்ட தாக்குதலில் ராஜூவ் காந்தி இறந்திருந்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று அனைவரும் கூறினர்.

அன்றைய காலகட்டத்தில் இந்திய ஜனாதிபதிக்கும் பிரதமர் ராஜூவ் காந்திக்கும் விரிசல் ஏற்பட்டிருந்தது. எனவே இதனால் இலங்கைக்கு எதிராக பாரதூரமான தீர்மானங்கள் எடுக்கப்படமாட்டாது என நான் அறிந்திருந்தேன்.

காரணம் பிரதமரின் மரணத்தின் பின்னர் இலங்கை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம்ட எடுப்பார் என்பதனால் ராஜூவ் எனது தாக்குதலில் மரணித்திருந்தால் அது அரசாங்கத்தின் சதியாக அன்று தனி மனிதம் செய்த கொலையாகவே பார்க்கப்பட்டிருக்கும்.

நான் ராஜூவ் காந்தியை கொலை செய்யும் நோக்கிலேயே தாக்கினேன். நிழலைக் கண்டு அவர் தலையை குணிந்ததால் தப்பித்தார். தோற்பட்டையிலேயே அடிப்பட்டது.

பிரபாகரன் என்பவர் இலங்கை பிரஜை. அவரே விடுதலைப் புலிகள் உறுப்பினரைக் கொண்டு தமிழ் நாட்டில் வைத்து ராஜூவ் காந்தியை கொலை செய்தார். எனினும் பிரபாகரனை இந்தியா என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை.

இந்த தாக்குதலை நடத்த நான் அச்சமடையவில்லை. மரணிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தால் அதனை நான் செய்திருக்க மாட்டேன். அன்றே என்னை சுட்டுக் கொன்றுவிடுவர் என்றுதான் நினைத்தேன். என்னை சுடவில்லை என்றால் ராஜூவ் காந்தியின் மெய்பாதுகாவலர்கள் தமது துப்பாக்கியை வெளியில் எடுத்தனர்.

தாக்குதலின் பின்னர் குற்ற விசாரணை திணைக்களத்தில் நான் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட 3 மாத காலங்கள் பற்றிக் கூறினால் நான் கண்ணீர் சிந்தவும் கூடும்.

அந்தளவுக்கு துன்பங்களை அனுபவித்தேன். மூட்டைப்பூச்சி நிறைந்த மேசை மீதே என்னை உறங்கச் செல்வார்கள். சீ.ஐ.டியினுள் இரு பொலிஸ் அத்தியட்சகர்கள் என்னை தாக்கியும் உள்ளனர்.

இதனை நான் முதல் தடவையாக வெளியில் கூறுகின்றேன். எனக்கு இன்று 53 வயதாகிறது. இந்த விடயத்தை வெளியில் கூறுவது தவறு என்று அன்று நான் நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பத்தில் எனது வழக்கிற்காக முன்னாள் சபாநாயகர் ஸ்டேன்லி திலகரத்ன உட்பட சட்டத்தரணிகள் 15 பேர் தாமாகவே முன்வந்தனர். அந்த வழக்கில் நியாயமின்றி ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மூவரை அன்றும் நான் விமர்சித்தேன். இன்றும் அவ்வாறுதான். ஏனென்றால் நான் நாட்டுக்கான மரியாதையையே செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.