தொழுகைக்காக மாடியிலிருந்து கீழே இறங்கிய பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Kumar in சமூகம்
644Shares

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி 6ஆம் குறிச்சியில் பெண்ணொருவர் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான கே.எம்.பஸ்மியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மாடிப்படிகளில் வீழ்ந்ததில் தலைப்பகுதி பலமாக அடிப்பட்டதினால் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப்பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.