சஹ்ரானின் நெருங்கிய சகா தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

Report Print Kanmani in சமூகம்
142Shares

நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அபுசாலி மொஹமட் சஹீட் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சில தினங்களுக்கு முன்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டி, கொரக்க ஓய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர், ஹம்பாந்தோட்டையில் சஹ்ரான் ஹசீம் நடத்திய சமய விரிவுரைகளில் கலந்துக்கொண்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.