வவுனியாவில் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து! அதிருப்தியில் பெற்றோர்

Report Print Vethu Vethu in சமூகம்

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் செயற்பாடு காரணமாக மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை குப்பையில் வீசியமையினால் மாணவிகள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளது.

இது தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை பொறுப்பற்ற முறையில் குப்பையில் போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டமையினால் தங்கள் பிள்ளைகள் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த ஆவணங்களிலுள்ள தொலைபேசி இலக்கங்கள் உள்ளமையினால் அடையாளம் தெரியாத நபர்கள் மாணவிகளுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

2000 ரூபா செலவிட்டு பல மாதங்களாக தயார் செய்த ஆவணங்களை மீளவும் மாணவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிய போதிலும், அதனை இவ்வாறு குப்பையில் வீசி தம்மை சிரமத்திற்குள்ளாகியதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.