பெண்ணின் உயிரை பறித்த பேருந்து - மக்கள் அடித்து உடைத்தமையால் பதற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்
1139Shares

ஹிக்கடுவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

விபத்தினால் கோபமடைந்த மக்கள் பேருந்திற்கு தாக்குதல் மேற்கொண்டு பாரிய சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

காலியில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய 51 வயதான இந்த பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இதனால் பிரதேச மக்கள் பேருந்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் சாரதியை கைது செய்துள்ளனர்.