மிக அழகிய நகரமான கொழும்பிற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

Report Print Sujitha Sri in சமூகம்

மிக அழகிய நகரமான கொழும்பு இன்று அருவருப்பை ஏற்படுத்தும், துர்நாற்றம் வீசும் நகரமாக மாறியுள்ளது.

கொழும்பின் பல சாலைகளில் மலைமேடுகள் போல் திடீரென குப்பை மலைகள் சில உருவாகியுள்ளன.

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களில் குப்பைகள் தேங்கியுள்ளதுடன், பல சாலைகளில் குப்பைகள் மலைகள் போல் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் புத்தளம், அருவக்காடு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைகளை அனுப்ப கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

என்ற போதிலும் கொழும்பில் தற்போது தேங்கியுள்ள குப்பைகளை ஒரே நாளில் சுத்தம் செய்ய முடியாது என கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.