யாழில் இன்று காலை நேர்ந்துள்ள விபரீதம்! பரிதாபமாக பறிபோன உயிர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். கோப்பாய் - உரும்பிராய் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இயக்கச்சியை சேர்ந்த நபரொரவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று சடுதியாக வீதியை கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) அதனுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞன் எனத் தெரியவருகின்றது.

இவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்திற்கு காரணமான சாரதியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் சாரதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.