பிரபல ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Report Print Ajith Ajith in சமூகம்

பிரபல ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இராணுவத்தின் இரண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் நேற்று கம்பஹா நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரேம ஆனந்த உடலகம மற்றும் லலித் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 6 இராணுவ அதிகாரிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.