வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் விபத்து: மூவர் காயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் பாடசாலை வீதியூடாக இன்று காலை பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் 40 வயதுடைய பெண் ஒருவரும், 14 மற்றும் 19 வயதுடைய இரு ஆண்களும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers