மீண்டும் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ள நூறு வருடங்கள் பழமையான சொத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

மலையகத்தில் தொடர் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் வெளியில் தென்பட ஆரம்பித்திருந்த ஆலயம் மீண்டும் மூழ்கி வருகின்றது.

அண்மையில் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் பொதுவான அளவில் இருந்து 63 அடி வரை வீழ்ச்சி அடைந்திருந்தது.

இதனால், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணிப்பின் போது மூழ்கிய ஆலயம் வெளியில் தென்பட ஆரம்பித்திருந்தது.

குறித்த ஆலயம் 1917ஆம் ஆண்டில் முழுவதுமாக கருங்கல்லிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

100 வருடங்கள் பழமையான இந்த ஆலயம் இன்னமும் பாதுகாப்பாகவே உள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் தற்போது மலையகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குறித்த ஆலயம் மீண்டும் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது.

அத்துடன் மவுசாகலை நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்ப இன்னும் 46 அடிக்கு நீர் மட்டம் உயர வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.