கந்தளாய் - பேராறு பகுதியில் மினி சூறாவளி: ஒருவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய், பேராறு பகுதியில் இன்று காலை மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதியில் வீடொன்றிற்கு அருகில் இருந்த பனை மரம் அடியோடு சரிந்து விழுந்துள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதி இடிந்து, கூறைகளும் சேதமாகியுள்ளன.

அத்துடன் பெண்ணொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் கந்தளாய் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தற்போதைய நிலைமையை பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தளாய் பகுதியில் தொடர்ச்சியாக கடும் காற்று வீசி வருவதாக தெரியவருகின்றது.