லிந்துலையில் உள்ள வீடொன்றில் திடீர் தீ பரவல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா - லிந்துலை, ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வீட்டின் அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பளாகியுள்ளன.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டு தெரியவராத போதிலும், மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது வீட்டில் இருந்த இருவரும் உயிர் பிழைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.