கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் தடம்புரண்டது

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றி வந்த வாகனமே விபத்திற்கு இலக்காகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.