முல்லைத்தீவு - குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்திற்கு நேற்று மீன்பிடிக்க சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை குறித்தநபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.