வவுனியாவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா, பாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 15இலட்சம் ரூபாய் பெறுமதியான நூறு வலைகளையும் மீட்டுள்ளதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

சூடுவெந்தபிலவு பகுதிகளைச் சேர்ந்த 10பேர் சட்டவிரோதமாக தங்கூசி வலை, முக்கூட்டுவலை போன்ற சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10பேரும் தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27.08.2019 அன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

இந்நடவடிக்கையில் மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினருடன் வவுனியா தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிஷாந்தன் தலைமையில் சென்ற அலுவலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்தனர்.