மருத்துவர் ஷாபிக்கு எதிராக மீண்டும் முறைப்பாடு

Report Print Steephen Steephen in சமூகம்

மருத்துவர் ஷாபி சிஹாப்தீனின் சொத்துக்கள் சம்பந்தமாக அவரை பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கோரி, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுரக்கிமு தேசய ஜாதிக ( தேசத்தை பாதுகாப்போம் தேசிய அமைப்பு ) என்ற அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைப்பின் தலைவரான சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன, 2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மருத்துவர் ஷாபிக்கு கிடைத்த பணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் ஷாபி சம்பாதித்த சொத்து தொடர்பாக மற்றும் அரச வங்கிகளில் கணக்குகள் குறித்த விடயங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகளில் 44 கோடி ரூபாவுக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணம் எப்படி வந்தது என்பது கேள்விக்குரியது.

இந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட பலத்த சந்தேகம் காரணமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று முறைப்பாடு செய்தேன்.

அதேவேளை நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அசாத் சாலி, மருத்துவர் ஷாபியின் சொத்துக்கள் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக விவாததிக்க அசாத் சாலி பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன் எனவும் இந்திரசிறி சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers