எதிர்வரும் 30ம் திகதி வடமாகாணத்தில் நீர் தொடர்பான கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், மற்றும் விவசாயிகள் என 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
17 வருடங்களின் பின்னர், ஒன்றாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்போது, ஒவ்வொரு திட்டங்களும் முன்வைக்கும் போது அந்த திட்டங்களை ஒன்றாக முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதேநேரம், ஆணையிறவு நீர் திட்டம் 30 மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவும் இந்த மாதம் இறுதியில் முன்னெடுக்கப்படும்.
வடமராட்சி மற்றும் ஆணையிறவு தண்ணீரை ஒன்றாக்கினால், எமக்குத் தேவையான தண்ணீரின் அளவிற்கு அதிகமானதாக உள்ளது.
இவற்றையும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.