கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் கருணாரத்ன

Report Print Suman Suman in சமூகம்

திறன் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு தொழில்பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியதும், குறை நிறைகளையும் கேட்டறிந்தார்.

இன்று காலை 11 மணியளவில் நைற்றாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் நிறுவனத்தினரால் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து தொழில் பயிற்சிகள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட்ட அவர் மாணவர்கள் மற்றம் பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள விரிஏதொழில் பயிற்சி நிறுவனத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டதுடன், அங்கும் இடம்பெறும் பயிற்சிகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.