மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவன்!

Report Print Murali Murali in சமூகம்

ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நம்பவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ரசிகா பிரயதர்ஸனி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக குறித்த பெண்ணின் கணவரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான கணவர் தலைமறைவதாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.