வவுனியாவில் தொடரும் கடும் காற்று: மேலும் 6 வீடுகள் சேதம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மேலும் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை மற்றும் இரவு வீசிய கடும் காற்று காரணமாகவே இப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில், வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள பூவரசன்குளம் பகுதியில் ஒரு வீடும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளத்திலுள்ள வீடு ஒன்றும், குருக்கள் புதுக்குளத்திலுள்ள இரண்டு வீடுகளும், கிறிஸ்தவ குளத்திலுள்ள இரண்டு வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்குணாமடுவில் 6 வீடுகளும் பாதிப்படைந்துள்ளன. குறித்த வீடுகளின் கூரைப் பகுதிகளே பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, காற்றினைத் தொடர்ந்து இரவு பெய்த மழையின் காரணமாக குறித்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களது உடமைகள், வீட்டு உபகரணங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்கதக்து.