கொழும்பிலிருந்த குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன!

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பில் கடந்த சில நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகள் இன்று மாலை முதல் அகற்றப்படுகின்றன. இவை புத்தளம் ஆறுவக்கலு பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.

இதற்கான உடன்பாட்டை கொழும்பு மாநகரசபை, வண்ணாத்துவில்லு பிரதேச சபை உட்பட்ட தரப்புக்கள் எட்டியதை அடுத்தே குப்பைகள் ஆறுவக்கலு குப்பை மேட்டுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.

குப்பை அகற்றும் உரிய திட்டம் இன்மைக் காரணமாக கடந்த சில நாட்களாக கொழும்பில் பாரியளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers