மணல் மேடு சரிந்து விழுந்து இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பாவற்குளத்தில் மணல் அகழ்வின் போது மணல் மேடு இடிந்து விழுந்ததில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாவற்குளம் பகுதியில் சிலர் ஆற்றில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த போது மணல் மேடு இடிந்து வீழ்ந்ததில் அதில் இருவர் அகப்பட்டுள்ளனர்.

அதனை அங்கு நின்றவர்கள் அவதானித்த நிலையில் உடனடியாக மண்ணை வாரி எடுத்து, குறித்த இருவரையும் மீட்டனர். இருப்பினும் இருவரும் மண்ணில் அகப்பட்டதனால் ஆபத்தான நிலையில் இருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

குறித்த இருவரில் ஒருவரின் முள்ளந்தண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மற்றையவர் குணமடைந்து வருவதாகவும் தெரியவருகிறது.