தற்கொலை குண்டுதாரியும் ஷஹரான் ஹாசிமின் சகோதரருமான மொகமட் ரில்வானின் காத்தான்குடியில் அமைந்துள்ள மாமியாரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரில்வானின் மனைவியும், மாமியாரும் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைப்பேசிகள், கையடக்கதொலைப்பேசிகள் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.