விமல் வீரவன்ச மீது ஊழல் முறைக்கேடு! விசாரணைக்கு திகதி குறித்த நீதிமன்றம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஊழல் முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீதான வழக்கு விசாரணைக்கு இன்று திகதி குறிக்கப்பட்டது.

இதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி விசாரணை திகதியாக கொழும்பு மேல்நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் இன்னும் மன்றிற்கு வந்துசேரவில்லை என்று மன்றால் அறிவிக்கப்பட்டது.