குழந்தைகளை பாதுகாப்பதே எனது முக்கிய நோக்கம்: ராஜித சேனாரத்ன

Report Print Sinan in சமூகம்

தெலசீமியா நோய் தொற்றில் பாதிப்புக்கு உள்ளாகியூள்ள 3000 க்கும் அதிகமான குழந்தைகளை கட்டாயம் பாதுகாப்பேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

3000க்கும் அதிகமான சிறுவர்கள் தெலசீமியா நோய்த்தாக்கத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரியப்படுத்துகின்றன.

அத்துடன் இவ்வருட இறுதிக்குள் கண்டியில் தெலசீமியா சுகமளிக்கும் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு இயலுமான அளவில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிரை பாதுகாப்பதே எனது நோக்கமாகும்.

உலகிலேயே கால் மாற்றீடு செய்யப்படும் அறுவை சிகிச்சையானது உலகிலேயே 05 இடங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது ஓர் விடயம் ஆகும்.

அத்துடன் அதில் 01 அறுவை சிகிச்சையானது இலங்கையில் நடைபெற்றதை நினைத்து பெருமைக் கொள்ள வேண்டும்.

அத்துடன் வேறு நாடுகளில் நடைபெற்ற மிகுதி 04 சத்திர சிகிச்சைகளும் பலனளிக்காமல் நோயாளர் மரணமடைந்ததுடன், இலங்கையில் நடைபெற்ற சிகிச்சையின் மூலம் குறித்த நோயாளர் தற்பொழுது சுகதேகியாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers