வேப்பங்குளம் பகுதியில் இரவில் நடந்த விபரீதம்:ஒருவர் படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் ஏறாவூர் - களுதாவளை வீதி, வந்தாறுமூலை-பகுதியைச்சேர்ந்த தங்கையா மதிசுதன் (37வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers