சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பான பிரேரணைக்கு காரைதீவு பிரதேசசபை பூரண ஆதரவு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை ஏற்படுத்தக்கோரும் பிரேரணைக்கு காரைதீவு பிரதேசசபை ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்து பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

காரைதீவு பிரதேசசபையின் 18வது மாதாந்த அமர்வு இன்று சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரஸ்தாப தீர்மானத்தை மாளிகைக்காடு சுயேச்சை அணியின் உறுப்பினர் அ.மு.பஸ்மீர் சபைக்கு விசேட பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார்.

அது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு தவிசாளர் கோரியபோது தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சாதி, இன ,மத ,பேதம் பாராது ஒரு மனதாக ஏகோபித்த முறையில் ஆதரவளித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

உப தவிசாளர் எ.எம்.ஜாகீர், உறுப்பினர்களான மு.காண்டீபன், எம்.றனீஸ் மற்றும் எ.ஜலீல் ஆகிய 4 உறுப்பினர்கள் சபையில் அனுமதிபெற்று தவிசாளரின் அனுமதியோடு வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.