இலங்கையில் ஆங்கில மொழியில் பின்தங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை அபிவிருத்தி செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்திற்கும் அமெரிக்கத் தூதுவர் திருமதி அலெய்னா பி ரெப்ளிஸ் ஆகியோருக்கும் இடையில் விசேட பேச்சுறவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமெரிக்காவின் சமாதானப் படையைச் சேர்ந்த தொண்டர் ஆங்கில ஆசிரியர்களின் சேவை பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஊவா மற்றும் மத்திய மாகணாங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும். ஆரம்பத்தில் 30 ஆசிரியர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படும். பின்னர் இந்த எண்ணிக்கை 150 வரை அதிகரிக்கப்படும். ஒரு தொண்டர் ஆசிரியரின் சேவைக்காலம் 2 வருடங்களாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.