ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து: இருவர் காயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - நுவரெலியா, பிரதான வீதிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இருந்து லிந்துலைக்கு 15 தொன் நிறையுடைய கஜு விதைகளை ஏற்றிச் சென்ற பாரஊர்த்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

பார ஊர்தியின் தடையாளி முறையாக இயங்காமையினாலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகனத்தின் சாரதியும், நபர் ஒருவருக்கும் இதன்போது காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.