வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையை திறந்து வைத்தார் அமைச்சர் சஜித்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலையொன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலையை இன்று காலை அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

தரணிக்குளம் மக்களின் நீண்டக் கால தேவையாக காணப்பட்டு வந்த அறநெறி பாடசாலையானது வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சின் 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.ராகுலன் தலைமையில் இடம்பெற்றதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உயர் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், அறநெறி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.