அரசியல் முக்கியஸ்தர்களின் பதாதை வீழ்ந்தமையால் கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

Report Print Malar in சமூகம்

கொழும்பு - கொச்சிக்கடையிலிருந்து கோட்டைக்கு செல்லும் வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் காணப்படும் அரசியல் முக்கியஸ்தர்களின் படம் பொறிக்கப்பட்ட பதாதை தாங்கியிருந்த கம்பம் முறிந்து வீழ்ந்தமையினால் இந்நிலை தோன்றியுள்ளது.

இதனால், அவ் வீதியினூடாக பயணம் மேற்கொள்ள தடை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சற்று ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.