பொதுஜன பெரமுனவின் குருணாகல் நகராதிபதிக்கு விளக்கமறியல்

Report Print Aasim in சமூகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகத்தில் இருக்கும் குருணாகல் நகர சபையின் நகராதிபதிக்கு எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கியைக் காட்டி நபரொருவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகராதிபதியை முதல் சந்தேகநபராகவும், மேலும் மூன்று பேரை ஏனைய சந்தேகநபர்களாகவும் இணைத்து சட்டமா அதிபரினால் குருணாகல் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குருநாகல் நகராதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவர் சட்டத்தரணியொருவர் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரை எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் உயர்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.