மண்வெட்டியால் மகனைத் தாக்கிய தந்தை! பலாங்கொடையில் சம்பவம்

Report Print Aasim in சமூகம்

பலாங்கொடை பிரதேசத்தில் தனது மகனை மண்வெட்டியினால் தாக்கிக் காயப்படுத்திய தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடையின் மஸ்ஸென்ன பிரதேசத்தில் இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மஸ்ஸென்ன, உடுமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

தனது தந்தையின் தாக்குதலினால் காயமடைந்த பதினேழு வயதான சிறுவன் படுகாயமுற்ற நிலையில் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பலாங்கொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.