ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Aasim in சமூகம்

குருணாகல் பொதுவைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிபுணர்குழு அறிக்கை கிடைக்கும் வரையில் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிசேரியன் சத்திரசிகிச்சையின்போது தாய்மாரை மலடாக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் முறைகேடான வழியில் பெருமளவு சொத்துக்களை சேகரித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளது.

இவை தொடர்பில் குருணாகல் பொது வைத்தியசாலையின் சக மருத்துவர்கள் மற்றும் கொழும்பு காசல் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை என்பவற்றின் மகப்பேற்று நிபுணர்கள் ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் என்பனவற்றையும் குற்றப் புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும், கொழும்புப் பல்கலைக்கழக நிபுணர்கள் அறிக்கை கிடைக்கும் வரை வழக்கு டிசம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.