இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Steephen Steephen in சமூகம்

இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியான இலங்கையில் உள்ள மாணவ, மாணவி விண்ணப்பிக்க முடியும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியினரின் பிள்ளைகளுக்கான இந்த புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2006 -2007 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினர் மற்றும் வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு புலமைப்பரிசிலுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.

மருத்துவம் மற்றும் மருத்துவப் பின் படிப்பை தவிர ஏனைய தொழில், தொழிசார பாடநெறிகளுக்கு நிதியுதவி கிடைக்கும்.

முதலாம் ஆண்டு மற்றும் புதிய மாணவர்களுக்கு மாத்திரமே இந்த விண்ணப்பங்களை அனுப்பு முடியும். இந்தியாவில் இரண்டாம் நிலை உயர் கல்வி பாடநெறிகளை கற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

https://www.spdcindia.gov.in/login/register.php என்ற இந்திய இணையத்தளத்திற்குள் சென்று மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.