அனுராதபுரத்தில் கிடைத்த 12ஆம் நூற்றாண்டிற்குரிய மோதிரம்

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம் அபயகிரி தாது கோபுரத்தை அழியாது பாதுகாக்கும் புனரமைப்புப் பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களில் கிறிஸ்துக்கு பின் 12ஆம் நூற்றாண்டிற்குரிய தங்கத்தினால் செய்ததாக நம்பக்கூடிய சிறிய பேழை, மோதிரம் மற்றும் காதணி உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அபயகிரி திட்டத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரி.ஜீ. குலதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றுடன் அபயகிரி தாதுகோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள வட்டத்தின் முன் பகுதியில் புதைந்து காணப்பட்ட மட்பாண்ட எச்சங்கள், பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளன.

அதற்கு அருகில் பேழையும் கிடைத்துள்ளது. மென்மையான தகடுகள், எலும்புகளின் எச்சங்கள், எலும்புகளில் செய்யப்பட்ட வலையலின் பகுதிகள் என்பனவும் கிடைத்துள்ளன.

அபயகிரிய முதல் கட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த தொல்பொருட்கள் மத்திய கலாச்சார நிதியத்தின் கொழும்பு அலுவலகத்தின் அனுமதியுடன் பேழைக்குள் இருக்கும் பொருள் என்ன என்பதை அறிய எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படும்.

தங்க நிறத்தில் இருக்கும் பேழையை திறப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அது உடைந்து விடக் கூடும். இதனால், எமது பிரதான அலுவலகத்தின் அனுமதியுடன் எக்ஸ்ரே பரிசோதனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம். இவை பொலன்னறுவை காலத்திற்குரியது என கருதப்படுகிறது.

இவை 12ஆம் நூற்றாண்டுக்குரியது என கருதப்படுகிறது. இறுதியாக 12ஆம் நூற்றாண்டில் மஹா பராக்கிரமபாகு மன்னன், இந்த தாதுகோபுரத்தை புனரமைப்பு செய்தார்.

இது தொடர்பான ஆவணங்கள் முதலில் கிடைத்தன. இந்த பேழைக்குள் மற்றுமொரு பேழை வைக்கப்பட்டிருந்தது. அதில் மண் பாத்திரம் இருந்தது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.