ஆளுநருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு சந்திப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டு இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ரிகார்டோ செலரி, ஹென்ஸ் வெபர், டிமிட்ரா லோனு, பால் ஜர்சக், லெனட மிலர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.