எக்னேலிகொட வழக்கு: மூன்று நீதிபதிகளை கோரும் சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in சமூகம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட கடத்தப்பட்டமை மற்றும் காணாமல் போன சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹோமாகமை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிபதிகள் அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எக்னேலிகொட கடத்திச் செல்லப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக 9 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

சந்தேக நபர்கள் இந்த குற்றத்தை கூட்டதாக, சூட்சுமான முறையில் திட்டமிட்டு செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகள் பல்வேறு பதவி நிலையில் இருப்பவர்கள். இவர்கள் கிரித்தலே இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர்கள்.

ஷம்மி அர்ஜூன குமாரரத்ன, நாதன் என்ற ஆர்.எம்.பி.கே. ராஜபக்ச, சுரேஷ் என்ற பியந்த டிலஞ்சன் உபசேன, ரஞ்சி என்ற சமிந்த குமார அபேரத்ன, கனிஸ்க குணரத்ன, அய்யாசமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே. டி.ஈ.ஆர்.பீரிஸ் ஆகியோரே இந்த சந்தேக நபர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.