டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம்: சஜித்

Report Print Thileepan Thileepan in சமூகம்

பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம். அதற்கு நவம்பர் மாதத்தில் நீங்கள் சரியான முடிவெடுக்க வேண்டும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரதேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களால் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட்டன.

ஒவ்வொன்றும் ஐந்து இலட்சம் பெறுமதியான 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் தோட்டச் செய்கைக்கான கடன்கள், வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பாற்குளத்தில் இரு மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

241, 242, 243 ஆகிய மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று வவுனியா மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீர், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாக இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எனது எதிர்கால நோக்கம், இலக்கு என்பவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

2025 ஆம் ஆண்டு ஆகும் போது அனைவருக்கும் நிழல். அதாவது அனைவருக்கும் வீடு கிடைத்திருக்க வேண்டும் என்பதாகும். அதன் ஒரு கட்டமாக இந்த வருடம் செப்ரெம்பர் மாதத்துடனும் 2500 வீடுகளும், அடுத்த கட்டமாக 2020 ஆம் ஆண்டு 5000 வீட்டுத் திட்டங்களையும், நான்காம் கட்டமாக பத்தாயிரம் வீட்டு திட்டங்களையும் என மொத்தாக 20,000 வீட்டுத்திட்டங்களை 2025 ஆம் ஆண்டு கட்டி முடித்து இலங்கை தேசத்தில் வாழும் மக்களுக்கு பரிசளிக்கப்பதே எனது நோக்கமாகும்.

நாடாளவிய ரீதியில் என்னுடைய பங்களிப்பு என்ன, உங்களுடைய பங்களிப்பு என்ன என்பது குறித்து பேச வேண்டும். பொருளாதார அபிவிருத்தி என்ற வசனம் உங்களுடைய காதுகளில் தினமும் ஒலித்திருக்கும். ஆனால் பொருளாதார அபிவிருத்தியை நீங்கள் அனுபவித்து இருக்க மாட்டீர்கள்.

அதாவது ஒரு நாடு அபிவிருத்தியின் பால் நடந்து செல்ல வேண்டுமாக இருந்தால், ஒரு நாடு அபிவிருத்தியில் வளர வேண்டுமாக இருந்தால் அது பொருளாதரத்துடன் கூடிய அபிவிருத்தியை சந்திக்க நேரிடும். அது ஏற்றுமதியில் தான் தங்கியுள்ளது.

எனவே ஏற்றுமதியை நோக்கிய பொருளாதார அபிவிருத்தி நோக்கி நாம் செல்ல வேண்டும். 1950- 1980 களிலே நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம் மலேசியா, சிங்கப்பூர், கொரியா, யப்பான் போனற நாடுகள் ஆசியாவின் பொருளாதார புலிகளாக இருந்தார்கள்.

அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதிகளை கொண்டு வந்து தமது நாடுகளை அபிவிருத்தி செய்தார்கள். வெளிநாட்டு முதலீடுகளை செய்தார்கள்.

கிழக்காசியில் ஒரு முக்கியமடான நாடாக எமது நாடு இருக்க, பிற நாடுகள் பொருளாதார புலிகளாக எழுச்சி பெறுகின்றன.

அன்பானவர்களே, இந்த நவம்பர் மாத்தில் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கும் பொழுது, நீங்கள் எனக்கு சரியான முறையிலேயே அந்த ஆதரவை தருவீர்களாகவிருந்தால் நாம் ஏற்றுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றுமதித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவேன்.

எனவே உங்களுடைய வாக்குகளை சரியபான முறையில் சரியான தீர்மானம் எடுத்து சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு வழங்க வேண்டும்.

ஏற்றுமதியை மையப்படுத்திய தொழில் பேட்டைகள், தொழிற்சாலைகளை அமைக்கும் போது தான் நாடு தானாக வளர்சியரைடயும். அப்பொழுது தான் நாட்டில் அபிவிருத்தியை கொண்டு வரமுடியும்.

இந்த நாட்டில் 333 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் சிறிய பெரிய அளவிலான கைத்தொழில்சாலைகள், அல்லது கைத்தொழில் பேட்டைகளை நிறுவ வேண்டும்.

அப்பொழுது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். இன்று படித்தவர்கள் வேலையின்றி வரிசையில் நிற்கிறார்கள்.

நாங்கள் அப்படியானவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க முடியும். வேலையில்லா பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படுகிறது.

அப்பொழுது தான் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இங்கு முதலீடு செய்வார்கள். அப்பொழுது எமது நாடு தானான வள்ச்சியடையும். நாம் வீடு வீடாக அனைவருக்கும் உதவி செய்ய முடியும். இன்று நாங்கள் ரூபாய்களில் இலாபத்தை பெறுகிறோம்.

ஆனால் நாங்கள் திட்டமிட்டுக்கும் செயற்பாடுகளை செய்யும் போது டொலர்களில் இலாபத்தை பெற முடியும். டொலர்களில் இலாபத்தை பெறும் ஒரு சந்ததியை உருவாக்குவதே எனது நோக்கம்.

அன்பான சகோரதர, சகோதரிகளே எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நீங்கள் அனைவரும் அணிதிரண்டு எமக்கு வாக்களிக்கும் போது இந்த நாட்டினுடைய தலையெழுத்தை மாற்றும் சக்தியாக உங்கள அனைவருதும் சக்தியாகவும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமான வாய்ப்பை பெற முடியும்.

அதனை செய்யக் கூடியவர் சஜித் பிரேமததாச அவர்களே என்பதை நீங்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். என்னுடைய அபிவிருத்தி பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்காலம் பற்றி தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அபிவிருத்தியை எதிர்பார்க்கும், அபிவிருத்தியை உற்று நோக்கும் மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைக்க வேண்டும்.

எனவே நாடளாவிய ரீதியில் 62 இலட்சம் குடும்பங்கள், 220 இலட்சம் மக்கள் வாழக் கூடிய இந்த நாட்டின் சகலவிதமான பொறுப்புக்களையும் ஏற்க நானும் தயாராகிவிட்டேன் என கூறிக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.