மூன்று கோடி ரூபா மாணிக்கக் கல் கொள்ளை! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Report Print Aasim in சமூகம்

இரத்தினபுரி, பெல்மதுளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பெல்மதுளை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் பின்கதவை இரவு நேரத்தில் உடைத்து அங்கிருந்த மாணிக்கக் கற்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரண்டு ஆசிரியர்கள், ராணுவத்திலிருந்து தப்பி வந்த இரண்டு பேர் உள்ளிட்ட நபர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

இன்றைய தினம் அவர்கள் பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையவில்லை என்று பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் 20ம் திகதி வரை அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.